Ysamtech2023
அற்ற குளத்தின் அறுநீர் பறவைப் போல் உற்றுழி தீர்வார் உறவல்லர், அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறவார் உறவு. தண்ணீர் வடிந்து போன குளத்தில் இனிமேல் இங்கு இருந்தால் ஏதும் கிடைக்காது என்று பறவைகள் குளத்தை விட்டு பறந்து போய்விடுவது போலவே, நம்முடன் பலநாள் பழகி நமக்கு கஷ்டங்கள் வரும்போது, வறுமை வரும்போது, இனிமேல் இவர்களால் நமக்கு பிரயோஜனம் இல்லை என்று நம்மை விட்டு விலகி போகிறவர்கள் நல்ல உறவுகள் அல்ல, அவர்களோடு பழகினதர்க்காக சற்று வருத்தமே. ஆனாலும் அதே குளத்தில் தண்ணீர் வடிந்தாலும் என்றும் குளத்திலேயே இருந்து குளத்தை விட்டு விலகாமல் தங்களுக்கு தண்ணீர் கொடுத்த நன்றிக்காக தங்கள் அன்பை வெளிப்படுத்தும் கொட்டி கிழங்குகள், அல்லி கொடிகள் போலவே நமக்கு கஷ்டங்கள், சோதனைகள் வருபோது, நாம் சோர்ந்து போகும் போது நம்முடன் இருந்து, கைகொடுப்பவர்களே நல்ல உறவுகள். சிறு வயதில் படித்தது